Friday, December 16, 2016

ஏன் உண்ணாவிரதப்போராட்டம்?ஏன் உண்ணாவிரதப்போராட்டம்?

இரானுவ கேண்டீன் என்பது முன்னாள் இராணுவ வீரர்களின் வாழ்வின் ஓர் அங்கம். மாதம் ஒன்றிற்கு இரண்டு அல்லது அதற்கு மேலாக கேண்டீனுக்கு செல்லவேண்டியுள்ளது. அவ்வா செல்லும்பொழுது அவர்கள் படும் அல்லல் பலப்பல. நாள் முழுவதும் துயரத்துடன் கழிவதுடன் நீண்ட வரிசை, டோகன் முறை, வேண்டிய பொருள் இல்லாத சூழ் நிலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.கிருஸ்ணகிரி கேண்டீனில் காலை 6 மணிக்கு மழையில் நனைந்துகொண்டே நிற்க வேண்டியிருந்தது. அத்தகைய நிலையை நமது சங்க மாநில செயலாளர் 3 ஜுலை 2011 அன்று பத்திரிக்கைகளில் பிரசிரிக்க செய்ததன் பலனாக கூரையுடன் கூடிய காத்திருக்கும் கூடம் அமைக்கப்பட்டது. இருப்பினும் கூடம் நிரம்பி வழிகிறது. காத்திருக்கும் முறை ,மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே அணுமதிக்கப்பட்ட பயணாளிகளுக்கு அனுமதி போன்ற கற்கால கட்டுப்பாடுகள் இன்றும் நம்மை வாட்டி எடுக்கின்றன. குறிப்பாக கிருஸ்னகிரி கேண்டீன் வாடிக்கையாளர்களும் சரி ,ஊழியர்களும் சரி சிரமத்தைத்தான் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பயனாளிகள் கேண்டீன் விக்காக பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். இந்த அல்லல் கிடைக்கும் பொருள் வாங்கவே, குறிப்பிட்ட பொருள் விரும்பி வாங்க வேண்டுமேயானாள் அதற்கு படும் அல்லல் சொல்லொனாதது.. இதற்காக நம் எடுத்த முயற்சிதான் என்ன என்பதையும் பார்ப்போம்.
1.   29 ஜுலை 2010 தேதியில் GOC, ATNK&K AREA அவர்களுக்கு மணு செய்தோம்.
2.   30 ஜுலை 2010 அன்று திரு பிரபோத் சத்வால் அவர்கள் நமக்காக Integrated HQ of MOD(Army) க்கு கடிதம் அனுப்பினார். அத்ற்கு ஆய்வு செய்யுமாறு ஆணை பிற்ப்பிக்கப்பட்டது.
3.   15 செப் 2010 தேதியிட்ட கடிதத்தில் கிருஸ்ணகிரி கேண்டீனில் வசதிகள் மெம்ப்டுத்தப்ப்டுமென பதில் கிடைத்தது. இருப்பினும் செய்யவில்லை. அதற்காக்த்தான் 3 ஜுலை 2011ல் பத்திரிக்கைகளில் செய்தி வந்த பின்தான் கூடம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வேலூர் நிர்வாகத்தின் போக்கை புரிந்துகொள்ளலாம்.
4.   அதே சமயம் நமது சங்க நிர்வாகிகள் அப்போதைய பாராளு மன்ற உறுப்பினர் R Thamaraiselvan BSC,BL அவர்களை சந்தித்து மணு அளித்ததின்பேரில் அவர் இராணுவ மந்திரிக்கு சிபாரிசு கடிதம் அணுப்பினார்.
5.   29 ஏப்ரல் 2011 அன்று நிர்வாகத்தால் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் Maj விக்டர் அவர்கள் 45 நிமிட நேரமளித்ததும் அதில் 41 நிமிடம் அவரே MRC –ன் WAR CRY “மதராசி! அடி! நில்! கொள்!” என பேசியதையும், இடைமறித்ததற்கு வெடித்து கொட்டியதையும் அனைவரும் அறிவர். அந்த கூட்டத்தில் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார் அதில் கிருட்டினகிரி பயணாளிகளிடம் தருமபுரிக்கு கேண்டீன் பிரித்து கொடுக்களாமா என் கேட்கப்பட்டது. அனைவரும் ஏகமனதாக கோரசுடன் உட்னே கொடுக்க வேண்டுமென்றனர். அவர் ஏற்பாடு செய்தவர்களின் சத்தம் அமுங்கிப்போனது. அதில் பாரூர் சங்கத்தின் சார்பாகவும் தருமபுரியில் கேண்டீன் வேண்டுமென கடிதம் தரப்பட்டது.
6.   7 ஜூலை 2011 அன்று Station commander, Redfields Coimbatore க்கு சங்க நிர்வாகிகள் அனைவரும் திரு லூகாஸ் பாபு அவர்கள் வாகனத்தில் சென்றோம். Stn Cdr –ஐ சந்திக்க இயலவில்லை. சாஸோ அவர்கள் நமது மணுவைப்பெற்றுக்கொண்டு அதே மேஜர் விக்டருடன் பேசிய பின் 2000 பேர் இருந்தால் Station தரப்பில் கேண்டீன் ஆரம்பிக்கப்படுமெனவும் அதற்கு அவர்களும் விழைவதாகவும் வய்மொழியாக கூறினார்.
7.   Stn Cdr கேண்டீன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பயனாளிகளின் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்த்னோம். அதற்கு பென்னாகரம்  பகுதி முழுதாக செய்த திரு சுப்ரமன்யம் அவர்களை பாரட்டுகின்றோம்.
8.   இவ்வாறு பல விண்ணப்பங்களை அனுப்பி பின் தொடர்ந்து கொண்டு வருவதுடன்,  Brig S Sivaraaman அவர்கள் நமக்காக ஒரு ஆய்வறிக்கை தயார் செய்து, அவர் சொந்த செலவில் பெங்களூரிலிருந்து சென்னை சென்று GOC –ஐ நேரில் சந்தித்து விளக்கினார். அந்த GOC செயல்படுத்தாமலே விரைவில் மாறிவிட்டார்.
9.   மேலும் நமது சங்க நிர்வாகிகள் Lt Gen சுப்ரதோ மித்ரா அவர்களை கிருஸ்ணகிரி ECHS –ல் சந்தித்து மணு அளித்தனர். நம்பிக்கை இருந்தது. தருமபுரியில் கேண்டீன் வருகிரது என்ற செய்திகள் கசிந்ததே தவிர வேறொன்றும் நடக்கவில்லை.
10. 2015 ல் Lt gen Krishna Menan அவர்களை சந்தித்து விளக்கினோம். அவருக்கு நெருக்கமானவர்கள் நமது அங்கத்தினர்கள் ஆவர். அவர் மிகவும் ஆதரவு அளித்தார். இருப்பினும் நமது கொடுங்கோள் இராஜா மேஜர் விக்டர் அவர் முன்பாகவே தருமபுரியில் வெறும் 500 கார்டுகள் இருப்பதாகவும் கிருஸ்ணகிரியில் 5000கார்டுகள் மட்டுமே இருப்பதாகவும். செத்தவர்களையெல்லாம் கணக்கில் கொள்கின்றோம் என்றும் கூறினார். நாம் QMG’s Branch HQ ATNK&K Area கடித எண் EXC/300/complaint நாள் 15 செப் 2011 கடிதத்தில் கிருஸ்ணகிரியில் 9732 பயனாளிகள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்றோம். அதற்கு Gen Krishnamenan அவர்கள் தமிழக அரசுக்கு எழுதி உண்மையான எண்ணிக்கையை பெறுவதாகவும் பரிசீலிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.
11.  அதே Maj Victor உதவி இயக்குனர் தருமபுரிக்கு தாலுகா வாரியாக விவரம் கேட்டு கடிதம் 18 பிப் 2015 எழுதினார். உதவி இயக்குனரும் 1501 பேர் முன்னாள் இராணுவ வீரர்களும் 402 விதவைகள் இருப்பதாகவும் பதில் மார்ச் மாதம் அனுப்பி உள்ளார். ஆனால் இத்தகைய ஆய்வு கிருஸ்ணகிரி மாவட்டதில் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தப்பட்டால் பாரூரில் இருக்கும் பயனாளிகள் தருமபுரி யுடன் இனைத்தால் தேவையான அளவு எண்ணிக்கை வந்துவிடும். மேலும் கடந்த தேர்தலின்போது படையில் உள்ளோருக்கு 1300 தபால் ஒட்டுக்கள் அனுப்பியதாக பத்திரிக்கை செய்தி வந்தது. இரானு வீரர்கள் 80% பேரின் குடும்பங்கள் இங்குதன் வசிக்கின்றன.  இதன் மூலம் மேஜர் விக்டர் இராணுவ நிர்வாகத்தை திசை திருப்புவதில் வித்தகர் என்பதும் அவரது செல்வாக்கு வலுவானது. அதில் நேர்மையோ முன்னாள் இரானுவர் மீது பற்றோ சிறிதளவும் இல்லை. அவர் கேண்டீனை இலாபத்திற்காக நடத்துகிறார் என்பது புரிகிறது. யார் இலாபத்திற்காக? என்பது தான் கேள்வி. அதற்காக முன்னாள் இராணுவத்தினர் பலியாகவேண்டுமென்பதே வெட்கக்கேடு.

12. இதற்கிடையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர்கள் எழுதிய கடித்திற்கு முதலில் ECHS தருவதாகவும் அதன் பின் கேண்டீன் தருவதாகவும் பதில் கிடத்துள்ளது. இரண்டும் உடனே துவங்குங்கள் என்பதே நமது வேண்டுகோள்.

நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க வேலூரில் மற்றொறு விரிவாக்கம் நடைபெறவிருக்கின்றது என கேள்விப்படுகின்றோம். நாம் முன்னால் இரானுவ வீர்ர்கள் இல்லையா? ஒரே மாவட்டத்தில் மூன்று விரிவாக்க கேண்டீன்கள் இருக்களாம் என்றால் நமது மாவட்டத்திற்கு ஒன்று கூட கொடுக்க முடியாதா? திருச்சியில் இருக்கும் NCC நாமக்கல்லில் கேன்டீன் நடத்தலாம் என்றால் சேலத்தில் இருக்கும் NCC தருமபுரியில் கேன்டீன் நடத்த முடியாதா?. நட்டம் என்றால் இலாபத்திற்கா கேண்டீன் நடத்துகின்றார்கள்?. இங்கு வரும் நட்டம் மற்ற இடத்தில் வரும் லாபத்தில் ஈடுகட்டமுடியாதா? முடியாது என்றால் யாருக்குப்போகிறது அந்தலாபம்? பயனாளிகளுக்காக கேண்டீனா அல்லது ஏதோ ஒரு பெரியவங்க இலபத்திற்காக கேன்டீனா? மக்களின் குமுறல் வீனாகாது. நமது சங்கம் பெருமையாக பொறுமை காத்துள்ளது. இன்று நடக்கும் போராட்டத்திற்கு  CSD நிர்வாகத்திற்கு முன்னாள் இரானுவ வீரர்களின் மீதுள்ள வெறுப்பும் சுய நலனும் மற்றுமே காரணம். இதனை இப்போராட்டத்தின் மூலமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். உடனே தருமபுரியில் CSD கேன்டீன் தொடங்கவேண்டும் அது கோவை பிரந்தியத்திலோ அல்லது சேலம் கேண்டீனின் விரிவாக்கமாகவோ இருக்கவேண்டும். ஏற்க மறுக்கும் நிலை வந்தால் போராட்டம் வலுக்கும் என்று எச்சரிக்கின்றோம்.

No comments:

Post a Comment